செவ்வாய், 29 நவம்பர், 2011

மனிதனும் மதமும் : மதம்

    மதம் என்றால் எதை நாம் மதமென்று கருதி இங்கு நாம் பேசுகிறோம் என்பதை முதலில் முடிவு செய்துகொண்டால் வசதியாய் இருக்கும். மதம் என்பதை பலவிதமாக சமயத்திற்குக் தகுந்தபடி சொல்லுவார்கள்,மதக்காரர்கள்.  ஆனால்,இங்கே நாம் மதம் என்பதை மனித வாழ்விற்காக, மனிதன் நடந்தக்கொள்ள வேண்டியதற்காக, மனிதனுடைய முடிவான லட்சியத்தை அடைய வேண்டியது என்பதற்காக,ஏற்பாடு செய்யபட்ட ஒரு சில விதிகள், எண்ணங்கள் என்பதாக சொல்லாம்.அது ஒன்றல்ல பல.
    அதிலே '' மதம் என்பது பழமையானது'' , அதற்கு நிபந்தனை ,''அது மாற்ற முடியாதது" " மறுக்க கூடாதது" என்பதாகும். இதை எல்லாம்"பெரியோர்களாலே மக்கள் நன்மையை முன்னிட்டு எடுத்துச் சொல்லப்பட்டது. அல்லது ஏற்பாடு செய்யபட்டது." இன்னும் இப்படிப்பட்ட மத சம்பந்தமான மடமை வளர வளர "அது(மதம்) கடவுளால் ஏற்பட்டது; கடவுளால் அனுப்பபட்ட நபர்களாலே ஏற்பட்டது; கடவுளுடைய பிள்ளைகளலே சொல்லப்பட்டது; கடவுள் அவதாரமாக வந்து எடுத்துக் காட்டப்பட்டது" என்று இப்படிப்பட்ட கட்டுகதைகள் எல்லாம் அதன் மேலே புகுத்தி "மனிதன் நம்பி ஆகணும். அதன்படி நடந்து தீரணும்" என்று சொல்லப்பட்டது.  "மனிதன் நம்புகிறானா , மத விதிப்படி  மனிதன் நடக்கிறானா? என்பது வேறு சங்கதி. ஆகவே . மதத்திற்கு இன்று இருக்கிற இலக்கணக் கருத்து இதுதான். ஆனால், இப்படிப்பட்ட மதங்கள் எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது தெரியுமேயானால் அதுவே ஓரளவுக்கு நமக்கு மதத்தைப் பற்றிய தன்மையை  விளக்கும்.


(தொடரும்...)
           

திங்கள், 28 நவம்பர், 2011

மனிதனும் மதமும் : மனிதன்

   தோழர்களே! 'மனிதனும் மதமும்' என்ற தலைப்பில்  பேசுவதென்றால், முதலிலே இரண்டு சங்கதிகளை நாம் விளக்கிக் கொள்ளவேண்டும்.

   அவை என்ன என்றால்,
  ஒன்று மனிதன் என்றால் என்ன?
  இரண்டு மதம் என்றால் என்ன?

 அது இரண்டையும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தோமேயானால் இந்தப் பேச்சு நமக்கு நேரக்கேடாக போய்விடும்.
 
  மனிதன் என்பது, உலகிலுள்ள சீவராசிகள் போன்ற ஒரு சீவன் என்று பொதுவாகக் கருத்ப்பட்டாலும், மற்ற எல்லா சீவப்பிராணிகளிடமிருந்தும் பிரித்துத் தனிப்படுத்தி வைக்கப்பட்ட சீவன் மனிதன் என்பவன்! எப்படி என்றால், சீவப்பிராணிகள் எல்லாவற்றுள்ளும் மனிதனை மாத்திரம் பிரிக்கிறதென்பதற்கு என்ன அவசியம் என்று சிந்தித்தால் மற்ற எல்லாப் பிராணிகளையும் விட மனிதனுக்கு மாத்திரம் கொஞ்சம் அறிவுச் சிறப்பு இருக்கிறது. அதாவது மனிதனுக்கு மாத்திரம் அதிகம் என்று சொல்லத்தக்க வண்ணம் உள்ளது. அதாவது சிந்திக்கிற தன்மைடயில் சிந்தனைச் சக்தி சிறப்பாக உள்ளது. பகுத்தறிவு இருக்கிறது. மற்ற சீவப்பிராணிகளுக்கும் அறிவு படிப்படியாக இருக்கலாம். அது மனிதனை போன்று அவ்வளவு சிந்தித்து, மனிதனைப்போல சமுதாய வளைச்சிக்கு அல்லது தன்நனலத்துக்கு ஏற்ற வண்ணம் மாற்றி நடக்கக்கூடிய சக்தி மற்ற சீவன்களுக்கு இல்லை. எந்த சீவன், எவ்வளவு உயர்ந்த சீவனாயிருந்தாலும் அந்த சீவனுடைய அறிவு ஒரு நிலைபெற்ற நடத்தைகளாகத்தான் இருக்கும்.

மனிதனின் அறிவு மாறுதலுக்கேற்றது
   மனிதனுடைய அறிவு மாறுதலுக்கேற்றது. எவ்வளவு சக்தி வாய்ந்த, அவ்வளவு பலம் பொருந்திய சிங்கம், புலி, கரடியானாலும் யானை, எருமை, காண்ரடாமிருகமனாலும் அவைகள் வாழ்வில் ஆயிரம் வருடங்களாக பெரிதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அன்று எப்படி சாப்பிட்டதோ, அன்று எப்படி வாழ்ந்ததோ அதே மாதிரிதான் இன்றும்.

   மாற வேண்டும். தன்னுடைய சவுகரியங்களுக்கு வேண்டிய வசதிகள் பண்ணி, தன்னுடைய வாழ்வை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறா எண்ணமெல்லாம் அவைகளிடத்தில் இல்லை. நடத்துபவன் நடத்துவதுபோல்தான் இருக்க முடியும்.

பகுத்த்றிவு கொண்டு சிந்திப்பவனே மனிதன்
   மனிதனுக்கு அப்படி இல்லை. அவனுடைய அறிவின் சக்தி ஒவ்வொரு நாலளும் தன்னுடைய நலத்தைப் ப்ருக்க, தன்னை வளர்த்துக் கொள்ள தனக்கு வேண்டிய வசதிகளை செய்துகொள்ள, விடங்களை சிந்தித்து மிடிவு பண்ணினதை மறு படி சிந்தித்து மாற்றிக்கொள்ள வசதியான் ஆராய்ச்சி அறிவு மனிதனுக்கு உண்டு. ஆகவே, இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

   அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மனிதன் என்பவனையே மனிதனாக வைத்திகொண்டு இப்பொது நாம் பேசுவோம். மனிதன் பகுத்தறிவைக் கொண்டு சிந்த்த்து, ஆராய்ந்து, நல்ல முடிவுக்கு வந்து, நல்லவகைகளை ஏற்றுக்கொள்ள கருத்துடையவன்.

மனிதனும் மதமும் : முன்னுரை

   அன்புக்கும்  பெருமைக்கும் உரிய முதல்வர்  அவர்களே! தமிழ் ஆசிரியப் பெருமான் அவர்களே! இக்குழுவின் தலைவர் அவர்களே! தாய்மார்களே! மாணவர்களே! தோழர்களே! நண்பரவர்கள் எடுத்துச் சொன்னதுபோல் நீண்ட நாளைக்குப் பிறகு இன்று உங்கள் முன்னிலையில் தோன்றி என் கருத்துகளை எடுத்துச் சொல்லும்படியான வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றையதினம் நமக்களிக்கப் பட்டிருக்கும் சொற்ப்பொழிவின் தலைப்பு "மனிதனும் மதமும்" என்பது பற்றியதாகும். இது எனக்கு மிக மகிழ்ச்சியான தலைப்புதான். ஆனால், மாணவர்கள் இருகின்ற நிலையில் இங்கு பெரும்பாலும் கூடியிருக்கிற உங்களுக்கு அது சீரணிக்கத் தகுந்ததா? என்பதுபற்றி எனக்குக் கொஞ்சம் யோசனையாயிருக்கிறது. சீரணித்தாலும் அதைத்தக்கபடி பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்பதை மற்றும் சிந்திக்க வேண்டியதாயிருக்கிறது.


   ஆனாலும், என்றைக்காவது ஒருநாள் நீங்கள் அதை அறிந்துதான் தீரவேண்டும். அது இன்னுங் கொஞ்சநானள் பொறுத்து வந்தால் என்ன? இன்றைக்கே வந்தால் என்ன? குற்றமிருக்காது! தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்கின்ற கருத்திலே நான் மகிழ்ச்சியோடு அத்தலைப்பில் இரண்டொரு எனது கருத்தை சொல்லலாமெனக் கருதுகிறேன். பிழைகள் பல இருக்கலாம். அவை உண்மையான பிழையாகவுமிருக்கலாம். பிழையென்ரு கருதக்கூடிதாகவுமிருக்கலாம். ஆனாலும், முதலிலே சொற்பொழிவுக்கு முன்னாலே எனது வேண்டுகோள் என்னவென்றால், நான் சொல்லுபவை எல்லாம் என்னுடைய சொந்தக்கருத்து. அவைகளை நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டியதுதான் உங்கள் கடமைதவிர, அவைகளையெல்லாம் அப்படியே நம்பவேண்டுமென்பதோ, ஏற்க வேண்டுமென்பதோ உங்கள் கடமையில்லை.

   அப்படிப்பட்டவைகளைப்பற்றி நான் ஏன் பேசவேண்டுமென்றால், கேட்டவைகளை உங்களுக்கு சரி என்று பட்டவைகளை ஏற்றுக்கொண்டு மற்றவைகளைத் தள்ளிவிட வேண்டும் என்பதற்க்குத்தான்.

   எதுபோல் என்றால், ஒலிக்கும் ரேடியோவிலே எவ்வளவோ கேட்கிறோம். எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளுகிறோமா? வேண்டியதை ஒப்புக் கொள்ளுவோம். மற்றதைத் தள்ளிவிடுகிறோம். அது போலத்தான் நீங்கள் என்னுடைய சொற்பொழிவில் உள்ள விடயங்களை நல்ல வண்ணம் சிந்திக்கவேண்டும். சிந்தித்த பிறகே முடிவுக்கு வரவேண்டும். நன் முடிவையே ஏற்கவேண்டும் என்ற வேண்டுகோளின் மீதே பேசத்தொடங்குகின்றேன்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

தத்துவ விளக்கம் - முன்னுரை

தலைவர்களே,

கல்லூரி முதல்வர் இராமசாமி அவர்களே!

      இன்று இந்தச் சேலம் காலேஜ் தத்துவக் கலைக் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டுமென்று அக்கழகத்தாரால் அழைக்கபட்டிருக்கிறேன். இங்கு மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பலதிறப்பட்ட பொதுமக்களும் ஏராளமாய் கூடியிருக்கிறார்கள். உங்கள் யாவருக்கும் புரியும்படியோ, திருப்தி ஏற்படும்படியோ பேசுவது, கடினமான காரியமாகும். அதிலும் தத்துவக் கலைச் சார்புக் கூட்டத்தில் தத்துவங்களைப் பற்றிப் பேச வேண்டியது முதல் உரிமை, ஆதலால் இப்படிபட்ட கூட்டத்தின் தத்துவ விசாரணையைப் பற்றி பேசுவது மிகமிகச் கடினமான காரியம்.

     தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண்பதும், அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.

     நாம் தத்துவத்தையும், இயற்கையையும், வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை-தத்துவம் என்பது சங்கடமான காட்சியாகவும், கேள்வியாகவும் இருக்கும். உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனைக் காண்பது என்பது இயற்கையை மறைத்துச் சாயலை வேறுபடுத்திய தோற்றத்தைக் காண்பது என்பதாகும். ஆனால், அதே மனிதனை இயற்கையாய் உள்ளபடி காண்பது என்பது அவனை நிர்வாணமாக, எவ்வித மறைவும் மாற்றமும் இல்லாமல் காண்பது என்பதாகும். இந்தக் காட்சி இன்றைய உலகுக்குப் பிடிக்காது. வெறுப்பையும் சங்கடத்தையும் உண்டுபண்ணக் கூடியதாகும். அப்படியே இன்றைய ஒவ்வொரு தன்மையையும், நிலைமையையும், நிர்வாணமாய், உண்மையாய்க் காண்பது என்பது இன்றைய உலகுக்கு வெறுப்பாகவும், அசூசையாகவும்,  அதிருப்தியாகவுமிருக்கும். அதனால்தான் தத்துவ விசாரணைக்கும், தத்துவம் அறிவதற்கும் மனிதன் சில பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்பார்கள்.

    அதனால்தான், நானும் உண்மைத் தத்துவத்தைச் சொல்வது என்பது பலருக்கு அதிருப்திகரமானதாக இருக்கும் என்று சொன்னேன். பொதுவாகவே நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 'யதார்த்தவாதி பஹூஜனவிரோதி'  என்று சொல்வதுண்டு. இதன் கருத்து மக்கள் யாவரும் பொய்யர்களாய் இருக்கவேண்டும் என்பதல். எது உண்மையொ, எது தத்துவமோ அது மக்களிடையில் மாற்றுருவம், மாற்றுப்பெயர், மாற்றுக்குணம் பெற்று இருக்கிறது. ஆதலால், உண்மை விளக்கம் திருப்தி அற்றதாகக் காணப்படும். எனவே, தத்துவ விசாரணை, விள்ளக்கம் என்பதற்கு இயற்கையிலேயே  மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் சங்கடமிருந்தாலும் நான் அதாவது ஒரு சாதாரண மனிதனும், தலைவர் என்னைபற்றி எடுத்துச் சொன்னது போல் நாஸ்திகன், மதத் துவேஷ அரசியல் எதிரி என்கின்ற தன்மையில் பேர் வாங்கி இருக்கிறவனும் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதென்றால், அது மிகமிகச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

    என்றாலும்,  என்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு- குறைகளுக்கு சமாதானம் சொல்லும் முறையிலேயே   என் தகுதிக்கு ஏற்ற அளவு தத்துவதைப் பற்றி சொல்ல முயலுகிறேன். ஏனனெனில், இந்த இப்படிப்பட்ட ஒரு அவையில் நான் எதைபற்றி பேசுவது என்பதாக எனக்குள் எழுந்த பிரச்சனை முடிவு பெறுவதற்கு முன்னதாகவே,  தலைவர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்துவதில்-இந்த  மேற்கண்ட சொற்களும் உச்சரிக்கப்பட்டதால், அவைகளே போதுமென்று கருதி அவைகளை பற்றப் பேசலாம் என்றே நினைகிறேன்.

    தோழர்களே! விடயம் அற்புதமானதாகவும் கருதப்படலாம்; பிரமாதமானதாகவும் கருதப்படலாம். எப்படி எனில், சாதாரண மக்களுக்குக் கடவுள், மதம், அரசியல் விடயங்களின் தத்துவம் மிகவும் அலட்சியமானதாகும். பெரிய அறிஞர்களுக்கு இந்த விடயங்கள் அபாரமானதும், மிக நுணுக்க்மாக் அறிந்து பேசத் தகுந்ததுமாகும்.

    ஒரு பாட்டுக்காரன் பாடும்போது, பாமர மக்களும் வித்வத்தன்மை உள்ளவர்க்ளும் கலந்திருந்து கேட்பார்களானாலும் பாமர மக்கள் பாட்டின் வாசகங்களை - சொற்களைப் பொறுத்தவரையில் கவனித்துவிட்டு,"இது ஏதோ  சாமி மீது பாடினான்","இது ஏதோ பெண்களை பற்றிப் பாடினான்" என்று என்று அந்த வார்த்தைகளின் அளவோடு அவர்கள் அவர்கள் பாட்டுக் கச்சேரிக்குப் போன தன்மை உடையவர்கள் கேட்ட அளவில், சங்கீதக் கலை ஞானத்தைக் கொண்டு மிக நுணுக்கமாகக் காது கொடுப்பார்கள். ஆதலால், பாடுகிறேன் பாடுகிற வேலையை மிகப் பிரமாதமாகக் கொண்டு மிகக் சிறமத்தோடு கவலையோடு பாட வேண்டியிருக்கும். அதனால்தான் நான் பேச எடுத்துக் கொண்ட விடயங்கள் அலட்சியமானதும் அபாரமானதும் என்று சொன்னென்.

    தோழர்களே! தலைவர்  கடவுளை குறிப்பிடும்போது, "எல்லாம்  வல்ல, எங்கும் நிறைந்த, யாவையும் செய்கின்ற தன்மை  உள்ளவர்" என்று  சொன்னார். அதோடு கூடவே தலைவர் மதத்தை பற்றி  குறிக்கும் போது."மனிதனுக்கும், கடவுளிக்கும் சம்பந்தத்தை உண்டாக்குவதற்கு மதம் " என்று  சொன்னாலர். இது மதபக்த  கூட்டமல்ல; புராணப் பிரசங்கக் கூட்டமுமல்ல. 'தத்துவ விளக்கம்' என்னும் தலைப்பில் பேசுவதைக் கேட்க வந்திருக்கும் கூட்டம். ஆனதால, கடவுலளையும், மதத்தனுடையவும் தத்துவம் - உண்மை தத்துவம் - அதுவும் பச்சை உண்மையாய் - பட்டங்கமாய் உள்ள தத்துவம் - பேசப்பட வேண்டியதுமாகும். ஆதலால், அந்தப்படி பேசுகிற முறையில் நான் பேசுகிறேன்.

    உண்மையிலேயே என்னை நாஸ்திகன் என்றும், மதத்துவேஷி என்றும் பலர் சொல்லுகிறார்கள்; பலர் கருதியுமிருக்கிறார்கள். இந்தப்படி நாஸ்திகர்கள் என்பவர்கள் யாராவது கருதி இருப்பார்களானால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆஸ்திகர்கள் கருதியிருப்பார்களேயானால் அவர்களுக்குகாகப் பரிதாபப்படுவேன்.

சனி, 12 நவம்பர், 2011

அறிவு தந்தை - ஈ.வே.இரா.

      பார்பனர்களிடமிருந்து நம் உரிமைகளை பெற்று தந்த மாமேதையின் சிந்தனைகளை மின் தொகுப்பாக்கும் முயற்சி. உங்களிடம் தந்தையின் சிந்தனைகள் சார்ந்த புத்தகங்களோ, குறிப்புகளோ இருந்தால், தாராளமாக, எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவற்றை பதிவு செய்ய காத்திருக்கிறோம்.

-நன்றி

நண்பர்களுடன் பகிரவும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More