தலைவர்களே,
கல்லூரி முதல்வர் இராமசாமி அவர்களே!
இன்று இந்தச் சேலம் காலேஜ் தத்துவக் கலைக் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டுமென்று அக்கழகத்தாரால் அழைக்கபட்டிருக்கிறேன். இங்கு மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பலதிறப்பட்ட பொதுமக்களும் ஏராளமாய் கூடியிருக்கிறார்கள். உங்கள் யாவருக்கும் புரியும்படியோ, திருப்தி ஏற்படும்படியோ பேசுவது, கடினமான காரியமாகும். அதிலும் தத்துவக் கலைச் சார்புக் கூட்டத்தில் தத்துவங்களைப் பற்றிப் பேச வேண்டியது முதல் உரிமை, ஆதலால் இப்படிபட்ட கூட்டத்தின் தத்துவ விசாரணையைப் பற்றி பேசுவது மிகமிகச் கடினமான காரியம்.
தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண்பதும், அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.
நாம் தத்துவத்தையும், இயற்கையையும், வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை-தத்துவம் என்பது சங்கடமான காட்சியாகவும், கேள்வியாகவும் இருக்கும். உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனைக் காண்பது என்பது இயற்கையை மறைத்துச் சாயலை வேறுபடுத்திய தோற்றத்தைக் காண்பது என்பதாகும். ஆனால், அதே மனிதனை இயற்கையாய் உள்ளபடி காண்பது என்பது அவனை நிர்வாணமாக, எவ்வித மறைவும் மாற்றமும் இல்லாமல் காண்பது என்பதாகும். இந்தக் காட்சி இன்றைய உலகுக்குப் பிடிக்காது. வெறுப்பையும் சங்கடத்தையும் உண்டுபண்ணக் கூடியதாகும். அப்படியே இன்றைய ஒவ்வொரு தன்மையையும், நிலைமையையும், நிர்வாணமாய், உண்மையாய்க் காண்பது என்பது இன்றைய உலகுக்கு வெறுப்பாகவும், அசூசையாகவும், அதிருப்தியாகவுமிருக்கும். அதனால்தான் தத்துவ விசாரணைக்கும், தத்துவம் அறிவதற்கும் மனிதன் சில பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்பார்கள்.
அதனால்தான், நானும் உண்மைத் தத்துவத்தைச் சொல்வது என்பது பலருக்கு அதிருப்திகரமானதாக இருக்கும் என்று சொன்னேன். பொதுவாகவே நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 'யதார்த்தவாதி பஹூஜனவிரோதி' என்று சொல்வதுண்டு. இதன் கருத்து மக்கள் யாவரும் பொய்யர்களாய் இருக்கவேண்டும் என்பதல். எது உண்மையொ, எது தத்துவமோ அது மக்களிடையில் மாற்றுருவம், மாற்றுப்பெயர், மாற்றுக்குணம் பெற்று இருக்கிறது. ஆதலால், உண்மை விளக்கம் திருப்தி அற்றதாகக் காணப்படும். எனவே, தத்துவ விசாரணை, விள்ளக்கம் என்பதற்கு இயற்கையிலேயே மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் சங்கடமிருந்தாலும் நான் அதாவது ஒரு சாதாரண மனிதனும், தலைவர் என்னைபற்றி எடுத்துச் சொன்னது போல் நாஸ்திகன், மதத் துவேஷ அரசியல் எதிரி என்கின்ற தன்மையில் பேர் வாங்கி இருக்கிறவனும் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதென்றால், அது மிகமிகச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.
என்றாலும், என்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு- குறைகளுக்கு சமாதானம் சொல்லும் முறையிலேயே என் தகுதிக்கு ஏற்ற அளவு தத்துவதைப் பற்றி சொல்ல முயலுகிறேன். ஏனனெனில், இந்த இப்படிப்பட்ட ஒரு அவையில் நான் எதைபற்றி பேசுவது என்பதாக எனக்குள் எழுந்த பிரச்சனை முடிவு பெறுவதற்கு முன்னதாகவே, தலைவர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்துவதில்-இந்த மேற்கண்ட சொற்களும் உச்சரிக்கப்பட்டதால், அவைகளே போதுமென்று கருதி அவைகளை பற்றப் பேசலாம் என்றே நினைகிறேன்.
தோழர்களே! விடயம் அற்புதமானதாகவும் கருதப்படலாம்; பிரமாதமானதாகவும் கருதப்படலாம். எப்படி எனில், சாதாரண மக்களுக்குக் கடவுள், மதம், அரசியல் விடயங்களின் தத்துவம் மிகவும் அலட்சியமானதாகும். பெரிய அறிஞர்களுக்கு இந்த விடயங்கள் அபாரமானதும், மிக நுணுக்க்மாக் அறிந்து பேசத் தகுந்ததுமாகும்.
ஒரு பாட்டுக்காரன் பாடும்போது, பாமர மக்களும் வித்வத்தன்மை உள்ளவர்க்ளும் கலந்திருந்து கேட்பார்களானாலும் பாமர மக்கள் பாட்டின் வாசகங்களை - சொற்களைப் பொறுத்தவரையில் கவனித்துவிட்டு,"இது ஏதோ சாமி மீது பாடினான்","இது ஏதோ பெண்களை பற்றிப் பாடினான்" என்று என்று அந்த வார்த்தைகளின் அளவோடு அவர்கள் அவர்கள் பாட்டுக் கச்சேரிக்குப் போன தன்மை உடையவர்கள் கேட்ட அளவில், சங்கீதக் கலை ஞானத்தைக் கொண்டு மிக நுணுக்கமாகக் காது கொடுப்பார்கள். ஆதலால், பாடுகிறேன் பாடுகிற வேலையை மிகப் பிரமாதமாகக் கொண்டு மிகக் சிறமத்தோடு கவலையோடு பாட வேண்டியிருக்கும். அதனால்தான் நான் பேச எடுத்துக் கொண்ட விடயங்கள் அலட்சியமானதும் அபாரமானதும் என்று சொன்னென்.
தோழர்களே! தலைவர் கடவுளை குறிப்பிடும்போது, "எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவையும் செய்கின்ற தன்மை உள்ளவர்" என்று சொன்னார். அதோடு கூடவே தலைவர் மதத்தை பற்றி குறிக்கும் போது."மனிதனுக்கும், கடவுளிக்கும் சம்பந்தத்தை உண்டாக்குவதற்கு மதம் " என்று சொன்னாலர். இது மதபக்த கூட்டமல்ல; புராணப் பிரசங்கக் கூட்டமுமல்ல. 'தத்துவ விளக்கம்' என்னும் தலைப்பில் பேசுவதைக் கேட்க வந்திருக்கும் கூட்டம். ஆனதால, கடவுலளையும், மதத்தனுடையவும் தத்துவம் - உண்மை தத்துவம் - அதுவும் பச்சை உண்மையாய் - பட்டங்கமாய் உள்ள தத்துவம் - பேசப்பட வேண்டியதுமாகும். ஆதலால், அந்தப்படி பேசுகிற முறையில் நான் பேசுகிறேன்.
உண்மையிலேயே என்னை நாஸ்திகன் என்றும், மதத்துவேஷி என்றும் பலர் சொல்லுகிறார்கள்; பலர் கருதியுமிருக்கிறார்கள். இந்தப்படி நாஸ்திகர்கள் என்பவர்கள் யாராவது கருதி இருப்பார்களானால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆஸ்திகர்கள் கருதியிருப்பார்களேயானால் அவர்களுக்குகாகப் பரிதாபப்படுவேன்.

0 comments:
கருத்துரையிடுக