புதன், 7 டிசம்பர், 2011

மதம் ஏற்படுவது எப்படி?

     "மதம் எப்படி ஏற்பட்டது? மனிதன் காட்டுமிராண்டியாக இருந்து ஆராய்ச்சித் திறமையற்ற காலத்திலேயே அவரவர்கள் புத்திக்கு ஏற்றபடி ஏதோ "மக்கள் நன்மைக்கு" என்ற கருத்திலே எடுத்துச் சொல்லப்பட்ட விஷயங்கள்தான்.

    பெரும்பாலும் இந்த உண்மையை எந்த மனிதனும் ஒத்துக் கொள்வான். மற்றும் அந்த பழைய காலத்துக்கும் இந்த நவீன காலத்துக்கும் இருக்கிற வித்தியாசம். அந்த காலத்திலிருந்த மனிதனுக்குள்ள அறிவுக்கும், இந்த காலத்திலுள்ள மனிதனுக்கு இருக்கிற அறிவுக்குமுள்ள தன்மை, இவைகளையும் அறிவுள்ள எவனும் ஒப்புக்கொள்வான். ஆனாலும்,

    எப்படி இருந்தாலும் அவர்கள் பெரியவங்க, தெய்வீகத்தன்மை கொண்டவர்கள் ஆனதால் அதைக் கண்டிப்பாய்ப் பின்பற்றியே ஆகணும்; அது எக்காலத்துக்கும் ஏற்றது,"   - என்ற நிபந்தனைஎல்லாம் அதன்மேல் சொல்லி அதை நிலை நிறுத்தத் தகுந்த வண்ணத்திலே வலியுறுத்துவார்கள். அப்படிப்பட்ட மதத்தை வைத்துக் கொப்ன்டுதான் இப்போது மதமும் மனிதனும் என்று பேசுகிறேன்.

அறிவும் மடமையும் என்ற ஆய்வே இது!
   மதமும் மனிதனும் என்கிறபோது அந்த தலைப்பினுடைய தத்துவங்களைப் பார்ப்போமானால், மனிதனும் மதமும் என்றல் "அறிவும் மடமையும் என்ற கருத்து "இயற்கையும், இயற்கைக்கு மாறுதலும்" என்ற கருத்து ஆகும்.

    ஏன் அப்படிச் சொல்கிரேநேன்றால், சாதாரணமாக மதங்கள் என்று எடுத்துக்கொண்டோமானால், எல்லா மதங்களும் பெரியவர்களாலே, தெய்வீகத்தன்மை உடையவர்கலலே உண்டாக்கப்பட்டது என்பதற்காகத்தான் இருக்கும். அந்தத் தலைப்பிலேதன் எல்லா மதங்களும் வரும். 

நண்பர்களுடன் பகிரவும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More