அன்புக்கும் பெருமைக்கும் உரிய முதல்வர் அவர்களே! தமிழ் ஆசிரியப் பெருமான் அவர்களே! இக்குழுவின் தலைவர் அவர்களே! தாய்மார்களே! மாணவர்களே! தோழர்களே! நண்பரவர்கள் எடுத்துச் சொன்னதுபோல் நீண்ட நாளைக்குப் பிறகு இன்று உங்கள் முன்னிலையில் தோன்றி என் கருத்துகளை எடுத்துச் சொல்லும்படியான வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றையதினம் நமக்களிக்கப் பட்டிருக்கும் சொற்ப்பொழிவின் தலைப்பு "மனிதனும் மதமும்" என்பது பற்றியதாகும். இது எனக்கு மிக மகிழ்ச்சியான தலைப்புதான். ஆனால், மாணவர்கள் இருகின்ற நிலையில் இங்கு பெரும்பாலும் கூடியிருக்கிற உங்களுக்கு அது சீரணிக்கத் தகுந்ததா? என்பதுபற்றி எனக்குக் கொஞ்சம் யோசனையாயிருக்கிறது. சீரணித்தாலும் அதைத்தக்கபடி பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்பதை மற்றும் சிந்திக்க வேண்டியதாயிருக்கிறது.
ஆனாலும், என்றைக்காவது ஒருநாள் நீங்கள் அதை அறிந்துதான் தீரவேண்டும். அது இன்னுங் கொஞ்சநானள் பொறுத்து வந்தால் என்ன? இன்றைக்கே வந்தால் என்ன? குற்றமிருக்காது! தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்கின்ற கருத்திலே நான் மகிழ்ச்சியோடு அத்தலைப்பில் இரண்டொரு எனது கருத்தை சொல்லலாமெனக் கருதுகிறேன். பிழைகள் பல இருக்கலாம். அவை உண்மையான பிழையாகவுமிருக்கலாம். பிழையென்ரு கருதக்கூடிதாகவுமிருக்கலாம். ஆனாலும், முதலிலே சொற்பொழிவுக்கு முன்னாலே எனது வேண்டுகோள் என்னவென்றால், நான் சொல்லுபவை எல்லாம் என்னுடைய சொந்தக்கருத்து. அவைகளை நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டியதுதான் உங்கள் கடமைதவிர, அவைகளையெல்லாம் அப்படியே நம்பவேண்டுமென்பதோ, ஏற்க வேண்டுமென்பதோ உங்கள் கடமையில்லை.
அப்படிப்பட்டவைகளைப்பற்றி நான் ஏன் பேசவேண்டுமென்றால், கேட்டவைகளை உங்களுக்கு சரி என்று பட்டவைகளை ஏற்றுக்கொண்டு மற்றவைகளைத் தள்ளிவிட வேண்டும் என்பதற்க்குத்தான்.
எதுபோல் என்றால், ஒலிக்கும் ரேடியோவிலே எவ்வளவோ கேட்கிறோம். எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளுகிறோமா? வேண்டியதை ஒப்புக் கொள்ளுவோம். மற்றதைத் தள்ளிவிடுகிறோம். அது போலத்தான் நீங்கள் என்னுடைய சொற்பொழிவில் உள்ள விடயங்களை நல்ல வண்ணம் சிந்திக்கவேண்டும். சிந்தித்த பிறகே முடிவுக்கு வரவேண்டும். நன் முடிவையே ஏற்கவேண்டும் என்ற வேண்டுகோளின் மீதே பேசத்தொடங்குகின்றேன்.

0 comments:
கருத்துரையிடுக