மதம் என்றால் எதை நாம் மதமென்று கருதி இங்கு நாம் பேசுகிறோம் என்பதை முதலில் முடிவு செய்துகொண்டால் வசதியாய் இருக்கும். மதம் என்பதை பலவிதமாக சமயத்திற்குக் தகுந்தபடி சொல்லுவார்கள்,மதக்காரர்கள். ஆனால்,இங்கே நாம் மதம் என்பதை மனித வாழ்விற்காக, மனிதன் நடந்தக்கொள்ள வேண்டியதற்காக, மனிதனுடைய முடிவான லட்சியத்தை அடைய வேண்டியது என்பதற்காக,ஏற்பாடு செய்யபட்ட ஒரு சில விதிகள், எண்ணங்கள் என்பதாக சொல்லாம்.அது ஒன்றல்ல பல.
அதிலே '' மதம் என்பது பழமையானது'' , அதற்கு நிபந்தனை ,''அது மாற்ற முடியாதது" " மறுக்க கூடாதது" என்பதாகும். இதை எல்லாம்"பெரியோர்களாலே மக்கள் நன்மையை முன்னிட்டு எடுத்துச் சொல்லப்பட்டது. அல்லது ஏற்பாடு செய்யபட்டது." இன்னும் இப்படிப்பட்ட மத சம்பந்தமான மடமை வளர வளர "அது(மதம்) கடவுளால் ஏற்பட்டது; கடவுளால் அனுப்பபட்ட நபர்களாலே ஏற்பட்டது; கடவுளுடைய பிள்ளைகளலே சொல்லப்பட்டது; கடவுள் அவதாரமாக வந்து எடுத்துக் காட்டப்பட்டது" என்று இப்படிப்பட்ட கட்டுகதைகள் எல்லாம் அதன் மேலே புகுத்தி "மனிதன் நம்பி ஆகணும். அதன்படி நடந்து தீரணும்" என்று சொல்லப்பட்டது. "மனிதன் நம்புகிறானா , மத விதிப்படி மனிதன் நடக்கிறானா? என்பது வேறு சங்கதி. ஆகவே . மதத்திற்கு இன்று இருக்கிற இலக்கணக் கருத்து இதுதான். ஆனால், இப்படிப்பட்ட மதங்கள் எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது தெரியுமேயானால் அதுவே ஓரளவுக்கு நமக்கு மதத்தைப் பற்றிய தன்மையை விளக்கும்.
(தொடரும்...)




0 comments:
கருத்துரையிடுக